Wednesday, December 30, 2015

முருங்கை - பசி-பிணி போக்கும் ஓர்  அற்புத மரம் 
Moringa  Olderifera - a miracle tree to feed the world hunger
மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின் 
ஊறுபாடு இல்லை உயிர்க்கு. குறள் - 945
மாறுபாடில்லாதா உணவை அளவு மீறாமல் மறுத்து அளவோடு உண்டால், உயிர் உடம்பில் வாழ்வதற்கு இடையூறான நோய் இல்லை.
Couplet 945 

With self-denial take the well-selected meal;
So shall thy frame no sudden sickness feel
Explanation
There will be no disaster to one's life if one eats with moderation, food that is not disagreeable
மொதல்ல யாளி நா என்னனு தெரிஞ்சிக்குவோம். யாளி என்பது தென்னகத்துக் கோயில்களில் சிற்பங்களாகக் காணப்படும் ஒரு விலங்குருவம். சிங்கம் + யானை = யாளி என்பது போல் சிங்கத்திற்குத் துதிக்கை வைத்தது போல் இருக்கும். யாளியில் இன்னொரு வகை சிங்க வாயிலிருந்து நீண்ட நாக்கு கொண்டதாக இருக்கும். சிங்கத்திற்குச் சிறகுகள் முளைத்த வடிவ யாளியும் உண்டு. மீனினம் போன்றதொரு யாளியையும் இந்நாவல் வழி அறிந்தேன். இந்த வடிவங்கள் கோயில்களின் சிலைகளில் காணப்படுகின்றன.நாவலின் பெயர் “யாளி”. எழுதியிருப்பவர் மணி தனிகை குமார்.

Inline images 2

சமூலம் என்றால் அணைத்து பாகங்களும் மருத்துவ பயன் கொண்ட ஓர்  அற்புத மரம் முருங்கை.  பனையைபோல்!
அகத்திய முனிவர்முருங்கைக் கீரையை நெய்யில் பொரித்து தினமும் உண்டு  வர யாளி போல் பலம் பெருகும்                                                  
என்கிறார்யாளி பத்து யானைகளின் பலம்கொண்டது என்பார்கள்இதை தெரிவிக்கும் அகத்திய முனிவர்களின் பாடல் –

"நறுந்தாளி நன்முருங்கை தூதுளை பசலை 
வாளிளறு கீரை நெய்வார்த்துண்ணில் யாளியென
விஞ்சுவார் போகத்தில் பெண்களெல்லாம்
பின் வாங்கிக் கேள்"

நறுந்தாளி என்பது தாளிக்கீரை ஆகும்; நன்முருங்கை என்பது முருங்கைக்கீரை; அடுத்து தூதுவேளை -பசலை கீரை -அரைக்கீரை.  
இந்த ஐந்து வகை கீரைகளை பசு நெய் ஊற்றி சமைத்து உண்டு வர யாளி என்ற (பத்து சிங்கத்தின் பலம் கொண்டது) விலங்கின் பலம் உடலுக்கு கிடைக்கும் என சித்தர்கள் குறிப்பிட்டுள்ளனர். 


அகத்தியர் குணபாடத்தில் வரும் சித்தர் பாடல் ஒன்று கீழ்வருமாறு
செறிமந்தம் வெப்பந் தெரிவிக்குந் தலைநோய்
வெறிமூர்ச்சை கண்ணோய் விலகு – மறமே
நெருங்க யிலையத்த விழி நேரிழையே நல்ல
முருங்கை யிலையை மொழி.
முருங்கை இலையினால் அக்கினி, மந்தம், உட்சூடு, தலைநோய், வெறிமூர்ச்சை, ( ஆக  வாதம், பித்தம், கபம்) & கண்ணோய் ஆகியவை நீங்கும்.

இலைக்காம்பு:
சிலர் முருங்கைக்கீரை சமைக்கும் போது அதன் காம்புகளை குப்பையில் போட்டு விடுவார்கள்.  ஆனால் இந்த காம்பிலும் அதிக மருத்துவக் குணம் உள்ளது.
முருங்கை இலைக்காம்புகளை சிறிதாக நறுக்கி அவற்றுடன் கறிவேப்பிலை, சீரகம், சின்ன வெங்காயம், பூண்டு, சோம்பு, மிளகு இவற்றை சேர்த்து சூப் செய்து அருந்தினால், நரம்புகள் வலுப் பெறும்.  தலையில் கோர்த்துள்ள நீர்கள் வெளியேறும்.  வறட்டு இருமல் நீங்கும்.    இரு பாலாருக்கும் நல்ல உடல் வன்மையைத் தரக்கூடியது.
முருங்கைப் பூ:
நாவின் சுவை யின்மையை மாற்றும் தன்மை கொண்டது.   முருங்கைப் பூவை பாலில் வேகவைத்து அந்த பாலை வடிகட்டி அருந்தி வந்தால் கண்கள் குளிர்ச்சி பெறும்.  பித்த நீர் குறையும்.  வாத, பித்த, கபத்தின் செயல்பாடு சீராக இருக்கும்.
முருங்கைப் பூவை நிழலில் உலர்த்திப் பொடி செய்து காலையில் கஷாயம் செய்து அதனுடன் பனைவெல்லம் கலந்து அருந்தி வந்தால் உடல் வலுவடைவதுடன், நரம்புகள் புத்துணர்வு பெறும்.
அதுபோல் பொடியை தேனில் கலந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் ஆண்மை பெருகும்.  இல்லற உறவில் நாட்டம் கொள்ளச் செய்யும்.  நீர்த்துப்போன விந்து கெட்டிப்படும்.  பெண்களுக்கு வெள்ளைப் படுதல் குணமாகி கர்ப்பப் பை வலுப்பெறும்.
முருங்கைப் பிஞ்சு:
முருங்கைப் பிஞ்சை எடுத்து சிறிதாக நறுக்கி நெய்யில் வதக்கி அதனை உண்டு வந்தால் இரத்தம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் நீங்கும்.
இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.இதில் அதிக கால்சியம் சத்து இருப்பதால் எலும்பு களுக்கு ஊட்டம் கிடைக்கும்.  எலும்பு மஞ்ஜைகளை பலப் படுத்தி இரத்தத்தைஅதிகம் உற்பத்தி செய்யும். ஆண்மை சக்தியைத் தூண்டும்.

முருங்கை பொடி: 

Moringa powder contains, inter alia, vitamin A, vitamin B1, vitamin B2, vitamin B3, vitamin B6, vitamin B7, vitamin B9, vitamin C, Vitamin D, Vitamin E, Vitamin K, boron, iron, potassium, calcium, copper, magnesium, manganese , phosphorus, sulfur, selenium, silicon, zinc.

பேராசிரியர் பெக்கர் ஆராய்ச்சியின்  முடிவில் முருங்கையில் ஊட்டச்சத்துக்களும், முக்கிய தாதுக்களும் அதோடு ஒப்பிட்ட 1000 செடிகளை விட அதிக அளவில் உள்ளது என முருங்கையின் பெருமையை உலகரிய செய்தார். தற்போது பல நிறுவனங்கள் முருங்கை பொடி விற்பனையில் கால் பதிக்க தொடங்கி விட்டது. 
FAO முருங்கையை உலகின் நோய், பஞ்சம் தீர்க்கும் உணவாக அறிவித்துள்ளது. 


Inline images 1Inline images 2
75 கிராம் பொடி ~ 12 € மட்டுமே (~850 ரூபாய்)! Tegut supermarket 28.10.2015

 "Indian Journal of Pharmacology” January 2008 இல் வெளிவந்த ஓர்  ஆராய்ச்சி முடிவு, முருங்கை ஆஸ்துமாவை குணபடுத்தும் வல்லமை உள்ளது என நிரூபித்துள்ளது.

வாழை, பால், பாலக் கீரை, காரட், தயிர், ஓட்ஸ், முட்டை = 100 கிராம் முருங்கை இலை உணவு. 

பாலை விட 4 மடங்கு ஜாஸ்தி கால்சியம் இருந்தாலும், அதிகம் விளம்பர படுத்த ஒரே காரணத்துக்காக சத்துள்ள முருங்கைய விட்டுட்டு சத்தில்லா விசமேறிய பாக்கெட் பால் கொடுத்து குழந்தைகளையும் முதியோர்களையும் ஆரோகியப்படுத்துவோமாக!

முருங்கை விதையில் குடும்பம் விருத்தி
முற்றிய முருங்கை விதைகளை எடுத்து காய வைத்து லேசாக நெய்யில்  வதக்கி பொடியாக்கி பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால், ஆண்மை பெருகும்.  விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.  நரம்புகள் பலப்படும், உடல் வலுப்பெறும்.  உடல் சூடு தணியும்.
முருங்கை விதை நீர் சுத்திகரிப்பிற்கு பல்வேறு ஆப்ரிக்க நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. FAO இதை பரிந்துரை செய்துள்ளது. நம்புங்கள் எந்தப் பக்கவிளைவும் இல்லாத வயாகரா விளைவுகள் கீரைகளில் இயற்கையாகவே பொதித்துவைக்கப்பட்டு இருக்கிறது.
முருங்கை எண்ணெய் : 
Vitamin A, B,C, D, E, K, Folate, Biotin, Omega 3, 6, 9 Oil, Zeatin
Folate  - புற்று நோயை விரட்டும், Zeatin  - the "fountain of youth hormone" - தோல் வயது முதிர்ச்சியை கட்டுப்படுத்தும். 

Inline images 2There is a widespread thinking that certain essential nutrients, calcium, magnesium, omega 3, 6, 9 fatty acid (Yes, Moringa oil has all three of them. No other commercial oil has all three together, not even Olive oil) can be supplied only through meat, egg, fish consumption. Moringa has all of them. 
Moringa contains 7 times more Vitamin C than orange, 4 time more calcium and vitamin A than milk and carrot, 3 times more K than banana and more iron than spinach!

Olive எண்ணையில் மட்டுமே,முருங்கை  எண்ணை போல்  70% ஒமேகா  9 உள்ளது. அதோடு நில்லாமல், ஒமேகா 3, 6 மற்றும் அதிக அளவு antioxidant கொண்டுள்ளதால் விரைவில் கெடாது (கொதிநிலை 220*C ), மிகச்சிறந்த பதப்படுத்தியாக பயன்படுத்தலாம். 
ஆயுர்வேதத்தில் தோல், மற்றும் மூட்டு வலி நிவாரணியாக பயன்படுத்தப்படுகிறது. ஆக தோல் சம்மந்தப்பட்ட வியாதிகள் உள்ளவர்கள், வரும்முன் காப்போர் இதனை தோலில் பூசி பயன் பெறலாம். முருங்கை ஓர்  அற்புத கிருமி நாசினி, ஆகையால் இதன் அணைத்து பாகங்களும் பொடியாகவோ, சாறாகவோ, எண்ணெய் இவற்றை உடலில் பூசி தோலை பாதுகாப்பதோடு நல்ல நறுமணமும் பெறலாம். இதை தெரிஞ்சவன் எப்படி நறுமனபொருட்கள் தயாரிச்சி விக்குறான் பாருங்க... 
Inline images 3
கையில நெய்ய வெச்சுகிட்டே நாம Amway, Fair and Lovely, Fairness போன்ற போலி டால்டா வின் சுவைக்கு அடிமையகிட்டோம்!
முருங்கை பூசி முகப்பொலிவை பெறுங்கள். 

முருங்கைப் பட்டை
முருங்கைப் பட்டையைச் சிதைத்து சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது வைத்து கட்டினால் வீக்கம் குறையும்.
முருங்கைப் பிசின் விந்துவைப் பெருக்கும்.  சிறுநீரைத் தெளிய வைக்கும்.

ஞாபக சக்தியைத் தூண்ட:
சில பெற்றோர்கள் தங்கள் குழந்தை நன்றாக படித்தும் தேர்வில் மதிப்பெண் பெறவில்லை என்பார்கள். இந்த பிரச்சனைக்குக் காரணம் அந்தக் குழந்தைகளுக்கு ஞாபக சக்தி குறைவே. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஞாபக மறதியே…
முருங்கைப் பூவை அரைத்து பாலில் கலந்து கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை இருவேளையும் அருந்தி வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும். 
பித்தம் குறைய:
மன உளைச்சல், மன அழுத்தம், பயம், கோபம், இயலாமை போன்ற மனம் சார்ந்த காரணங்களும், தூக்கமின்மை, உடல் அசதி போன்ற காரணங்களும் ஈரலை பாதித்து அதனால் பித்தம் அதிகரித்து இரத்தத்தில் கலந்து மேல் நோக்கிச் சென்று தலைவலி, தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் போன்றவற்றை உண்டாக்கும்.
பித்த அதிகரிப்பால் தான் உடலில் பல நோய்கள் உருவாகின்றன. இதற்கு முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் கஷாயம் செய்து காலை மாலை அருந்தி வந்தால் உடலில் உள்ள பித்தம் குறைந்து, உடல் அசதி நீங்கி உடல் நிலை சீராகும்.
நரம்புத் தளர்ச்சி நீங்க:
அதிக வேலைப் பளு, மன அழுத்தம் காரணமாக சிலருக்கு நரம்புகள் செயலிழந்து நரம்பு தளர்ச்சி உண்டாகும்.
முருங்கைப் பூவை கஷாயம் செய்து வாரம் இருமுறை அருந்தி வந்தால் நரம்புத் தளர்ச்சி நீங்கும்.
நீரிழிவு நோயாளிக்கு:
கிராமங்களில் ஒரு பழமொழி சொல்வார்கள்.
  " நித்திய கண்டம் பூரண ஆயுசு " என்று
நீரிழிவு நோயாளிகளின் நிலையும் இதுபோல்தான். இவர்கள் முருங்கைப் பூவை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நீரிழிவு நோயால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும்.
பெண்களுக்கு:
சில பெண்கள் மாத விலக்குக் காலங்களில் அதிக கோபம், எரிச்சல், தலைவலி, அடி வயிறு வலி என பல வகையில் அவதிக்கு ஆளாவார்கள். இவர்கள் முருங்கைப் பூவை கசாயம் செய்து அருந்தி வந்தால் மேற்கண்ட உபாதைகள் குறையும்.
தாது புஷ்டிக்கு:
ஆண் பெண் இருபாலரும் இன்றைய அவசர உலகில் பொருளாதாரப் போராட்டத்தில் அதிகம்
மூழ்கிவிடுகின்றனர். இதனால் இவர்கள் தாம்பத்ய உறவில் நாட்டமில்லாமல் உள்ளனர். மேலும் மன அழுத்தம், மன உளைச்சல், பயம் போன்றவற்றாலும் தாம்பத்ய எண்ணம் தோன்றுவதில்லை.
இவர்கள் முருங்கைப் பூவை அரைத்து பாலில் கொதிக்க வைத்து பனங்கற்கண்டு கலந்து 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம் அருந்தி வந்தால் தாம்பத்ய உறவில் நாட்டம் உண்டாகும்.

முருங்கைய ஓர்  அற்புத மரம் நு அறிவிச்சு அதை பற்றி வந்த ஆவணப்படங்களில் சில : https://www.youtube.com/watch?v=-9e2WNPdN-I
Inline images 4
இந்த கற்பகவிருட்சம் பற்றி பல ஆராய்ச்சிகளும் (தோல் வியாதி, தூக்கமின்மை, நரம்பு தளர்ச்சி, புற்றுநோய்) அதை தினப்பயன்பாட்டிலும் ஐரோப்பாவில் அதிகரித்து வருகிறது. இந்த 69 நிமிட காணொளியை கண்ட பின் ஏன் 75 கிராம் முருங்கை பொடியை ~850 ரூபாய்க்கு விற்கிறார்கள் என்பதை புரிந்துகொண்டேன். 

அதே நேரத்துல பல வெளிநாட்டு நிறுவனங்கள் காட்ற ஆர்வத்த பாக்கும் போது, மகிழ்ச்சியைவிட பயமே அதிகமா வருது. உற்சாக பானம், ஊட்டச்சத்து மாத்திரை, எடை குறைப்பு அஸ்திரம், முகம் & தோல் பூச்சு நு இதை நம்ம கிட்டயே ஊரப்பட்ட விலைக்கு விக்கப்போரனுங்க!! பாருங்க இந்த காணொளியை

ABCDEK நு எல்லா சத்துக்களும் இருக்குங்க இதுல, இன்னும் என்ன பாக்குறீங்க போய்  முருங்கைக்காய்  சாம்பார், முருங்கை இலை வதக்கல், பூ கூட்டு என்று பட்டய கிளப்புங்க...

முருங்கை நு இல்லைங்க, பொதுவா கீரை… 30-40 நாளில் வளரும் பொக்கிஷம். தினம் ஒரு கீரை சாப்பிடுவது ரத்தசோகை, மலச் சிக்கல், பலக் குறைவு, நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவு எனப் பல நோய்க்கும் மருந்து. ‘பொன்னாங்கண்ணிக்கு புளிஇட்டு ஆக்கினால் உண்ணாப் பெண்ணும் உழக்கு’ எனப் பெண்ணுக் கும்… ‘போன கண்ணும் திரும்புமாம், பொன் னாங்கண்ணியினாலே’ எனக் கண்ணுக்கும் மருந் தாகும் உணவான பொன்னாங்கண்ணிக் கீரை இன்று எத்தனை பேர் வீட்டில் சமைக்கப்படு கிறது? மாசத்துக்கு ஒருக்கா இல்ல, தினமும்?

இந்த அவரச யுகத்துல கீரை வாங்கி, ஆய்ந்து எடுத்து, நாட்டுப்பசு நெய் கொண்டு கீரையைச் சமைக்காட்டியும், கிடைக்குற கீரைய அப்பப்ப அழகா உலர்த்தி பொடி  பண்ணி வெச்சுண்டா, இட்லி, சாம்பார், தோசை, வடை, பூரி, ரசம், கூட்டு, அவியல், பழச்சாறு, துவையல் & விலங்கு கறி என எல்லாவித உணவிலும் கலந்து சாப்பிடலாம். உலர்ந்த இலை / பொடி  சுடுதண்ணி ல போட்டு அருமையான தேநீர், மூலிகை வடிநீர் (காப்பி) காய்ச்சி சாப்பிடலாம்தானே! என்ன, ஆரோக்கியமா இருக்கனும் என்ற மனசும் அதுக்கான மெனக்கெடலும் கொஞ்சம் அதிகமாவே தேவை!  இந்த மெனக்கெடல் தேவை இல்லையா இருக்கவே இருக்கு வைட்டமின், கால்சியம், மேக்னிசியம் மாத்திரைகள், பாக்கெட் பால், வெள்ளை சொக்காய்  போட்ட ஆங்கில மருத்துவர்கள்!

மேலும் இப்பூவின் சில மருத்துவ குணங்கள் 
முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது.
முருங்கை பூவை பாலில் வேகவைத்து- பிறகு அந்த பாலை நன்றாக வடிகட்டி சாப்பிட்டு வந்தால் கண்கள் குளிர்ச்சி அடையும் .
முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி பொடி பொடியாக்க காலையில் கஷாயம்-செய்து அதனுடன் பனைவெல்லத்தை கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் வலுவடையும் , நரம்புகள் புத்துணர்ச்சி பெறும்.
முருங்கைப் பூவுடன் பசும்பாலை சேர்த்து நன்றாக காய்ச்சி காலை மாலை என்று இரண்டு வேளையும் சாப்பிட்டு வந்தால் கண்ணில் ஈரப்பசை அதிகமாகும் , கண் பார்வை குறைபாடு நீங்கும்.
கண்ணில் வெள்ளெழுத்து நோய் உள்ளவர்கள் முருங்கைப் பூ பொடியுடன் தேன்கலந்து அருந்தி வந்தால் வெள்ளெழுத்து மாறும். கண்ணில் உருவாகும் வெண்படலமும் மாறும்.


இந்த அற்புத மரத்தின் பயன்களை மேலும் அறியசில எளிய மருத்துவ குறிப்புகள்:
இதன் இலையை கட்டிகள் உடைவதற்கும் வதக்கிக் கட்டுதல் உண்டு.
உடல் வலிமை மட்டுமல்ல, உள்ளிருக்கும் நரம்புகளையும் வலுப்படுத்தும். நரம்புத்தளர்ச்சியை போக்கும்.
மூட்டுவலிகள் போக, தினமும் முருங்கை கீரையை உப்புடன் வேக வைத்து 15 நாள் சாப்பிடவும்.
முருங்கை கீரையில் மஞ்சள், பூண்டு, உப்பு சேர்த்து வேக வைத்து சாப்பிட்டால் வாய்வு கோளாறுகள் விலகும்.
முருங்கை கீரையில் விட்டமின் ‘ஏ’ இருப்பதால் கண்பார்வைக்கு நல்லது. நீர் விடாமல் வேக வைத்து கண்களின் மீது வைத்து கட்டினால் கண் நோய்கள் நீங்கி இலையின் ரசத்துடன் தேன் சேர்த்து கண்ணிமைகளில் தேய்க்கலாம்.
முருங்கை இலையை அரைத்து வீக்கங்களின் மேல் ‘பற்று’ போடலாம்.
இலைச்சாற்றை 40 கிராம் அளவில், கொடுக்க, நன்றாக வாந்தியாகும்.
முருங்கை கீரை இரத்த சோகையை போக்கும். 10 மிளகு சேர்த்து அரைத்த முருங்கைக் கீரை (ஒரு கைப்பிடி) யை 15 நாள் சாப்பிட வேண்டும்.
உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க, 20 நாள் தினசரி காலை, மாலை இரு வேளை தேன் + முருங்கை இலைச்சாறு (15 மில்லி) + 10 மிளகு (பொடித்தது) அருந்தி வரவும்.
முருங்கை கீரை ஆண்மையை பெருக்கும். அதன் சாற்றில் ஜாதிக்காயை உடைத்து சேர்த்து ஊற வைக்கவும். பிறகு உலர்த்தி, பொடியாக்கி தினமும் இரவில் 2 கிராம் சாப்பிட்டு வர, காதல் உணர்வுகள் அதிகமாகும்.
சிறுநீர் தாராளமாக, சுலபமாக பிரிய பார்லி கொடுப்பதுண்டு. அத்துடன் முருங்கை கீரை, சீரகம் (கால் ஸ்பூன்) சிறிதளவு மஞ்சள் சேர்த்து கஷாயமாக்கி குடித்தால் நீர்க்கட்டு நீங்கி, சிறுநீர் தாராளமாக பிரியும். முருங்கை கீரை சாற்றை குடித்தால் வயிற்று வலி தீரும்.
முருங்கை இலைகளை அரைத்து சாறு எடுத்து, சிறிது தேன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வயிற்றுப் பூச்சிகள் அழியும்.
எள் சேர்த்து சமைத்த முருங்கை கீரை கூட்டு நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது.
முருங்கைக் கீரை ஒரு சர்வரோக நிவாரணி. மலச்சிக்கலை சீக்கிரமாக போக்கும்.
100 கிராம் முருங்கை கீரையில் உள்ள சத்துக்கள்

Friday, November 6, 2015


Palmyrah palm (Borassus flabellifer) - a tree to worship to save our life & save our environment 

நம்மையும் காத்துக்கொள்ள பனை காப்போம் & பயன் பெறுவோம்

Source: katpahachcholai.com


              தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் 
              கொள்வர் பயன் தெரிவார் (குறள் 104)
             
திருவள்ளுவர் தாத்தா பாடி வெச்சிருக்காரு. அதாவது, ஒருத்தர் செய்யுற தினையளவு நன்மை கூட, நன்றியுள்ள மனுஷனுக்கு பனை அளவுக்குத் தெரியும்ங்கிறதுதான், இந்த பாட்டோட அர்த்தம். பனை மரம் தர்ற பலன்களை அனுபவிச்சு தெரிஞ்சுக்கிட்டதால, அதை குறள்ல நல்லாவே பயன்படுத்தியிருக்கார் திருவள்ளுவர். ஆனா, நாம, அற்புதமான இந்த பனைமரங்களை, அதனுடைய ஆயுள் முடியறதுக்கு முன்னயே வெட்டி வெட்டி, செங்கல் சூளைக்கு அனுப்பிக்கிட்டிருக்கோம்.
ஒரு பனை மரத்தில இருந்து, ஒரு வருஷத்துக்கு பதநீர்-180 லிட்டர், பனை வெல்லம் - 25 கிலோ, பனஞ்சீனி - 16 கிலோ, தும்பு (மிதியடி, பிரஸ் தயாரிக்கப் பயன்படுகிறது) - 11.4 கிலோ, ஈக்கு - 2.25 கிலோ, விறகு - 10, கிலோ, ஓலை - 10 கிலோ, நார் - 20 கிலோ.... அளவுக்குக் கிடைக்குதுனு விஞ்ஞானிங்க பட்டியல் போட்டு சொல்லியிருக்காங்க. தென்னை மரத்தோட ஒப்பிட்டா, பனை மரத்துலதான் நிறைய பலன் உண்டு. ஆனா, தென்னை மரத்தைக் கொண்டாடுற மாதிரி, பனை மரத்தை நாம கொண்டாடுறதில்ல. நம்மளோட தயவு இல்லாமலே, மகசூல் கொடுக்கிற பனை மரத்துக்கு இனிமேலாவது நன்றி சொல்வோம்.
வெள்ளைக்காரன் நம்ம மண்ணுல காலடி வெச்சதிலிருந்துதான் பனைக்கு நேரம் சரியில்லாமா போயிடுச்சு. வெள்ளைக்காரன்தான், பனை மரம் ஏறி பதநீர் இறக்கிறவங்களுக்கு லைசென்ஸ் முறையைக் கொண்டு வந்தான். ஏன்னா, வெளிநாட்டு கம்பெனி பீருக்கும், பிராந்திக்கும் போட்டியா இருந்தது, கள்ளும், பதநீரும்தான். அடுத்து, தமிழ் மக்களோட உணவுல பனங்கருப்பட்டிக்கு (பனைவெல்லம்) தனியிடம் இருந்துச்சு. இதை ஒழிச்சுகட்டிப்புட்டு, வெள்ளைச் சர்க்கரையைக் கொண்டு வர திட்டம்போட்டான். கறுப்பா இருக்கிற பனங்கருப்பட்டியை விட, வெள்ளையா இருக்கிற சர்க்கரை சாப்பிடறதுதான் நல்லதுனு பொய்ப்பிரசாரம் வேற நடந்திருக்கு. கூடவே, நம்ம தமிழ் மக்களோட வெள்ளை நிற மோகம், பனங்கருப்பட்டியைத் தூக்கி எரிய வெச்சிடுச்சு.
‘‘கரும்பைக் காட்டிலும், பனை மரம்தான் சிறந்தது. ‘பணப்பயிர் கரும்பு’ என்று சொல்பவர்களை நம்ப வேண்டாம். கிராம மக்களுக்கு ஏற்றது கருப்பட்டிதான்’’னு காந்தியப் பொருளாதார மேதை ஜே.சி.குமரப்பா, இந்தியா சுதந்தரம் வாங்கின உடனே, குரல் கொடுத்தாரு. ஆனா, அது ஏற வேண்டியவங்க காதுல ஏறவே இல்ல. இதோட, பலாபலனை இப்போ அனுபவிக்கத் தொடங்கிட்டோம்.
‘‘பனங்கருப்பட்டியும், பனங்கற்கண்டும் சாப்பிட்டால் வாத பித்தம் நீங்கும். பசியைத் தூண்டும். புஷ்டி தரும்...’’னு ஆயுர்வேத மருத்துவம் சொல்லுது.
பனங்கற்கண்டை, பசும்பால்ல காய்ச்சி குடிச்சவங்களுக்குத்தான், அந்த ருசியோட அருமை தெரியும். தொண்டைப் புண், வலி மற்றும் சளி பிரச்னைக்கு பனங்கற்கண்டுப் பால் கண் கண்ட மருந்து. புகழ்பெற்ற பேச்சாளர்களும், இனிய குரல் வளமுள்ள பாடகர்களும் பனங்கற்கண்டுப் பாலைக் குடிக்காம, மேடை ஏற மாட்டாங்க. இனிமையான குரலுக்கும், கம்பீரமான பேச்சுக்கும் அடித்தளம் போட்டுக் கொடுக்கிற சக்தி பனங்கற்கண்டுல இருக்கு.
பனங்கருப்பட்டியை மறந்து, நாம எவ்வளவு தூரம் வந்தோமோ, அந்த அளவுக்கு அதைத் தேடி ஓட வேண்டிய சூழ்நிலை உருவாகியிருக்கு.


சீனி உடலுக்கு எந்த சத்தையும் கொடுக்காமல், உடம்பிலுள்ள சத்தையும் ஈர்த்துக் கொள்கிறது. அதனால்தான் இது சத்தில்லாத கலோரி, சத்தில்லாத உணவு என்றும் அழைக்கப்படுகிறது.

சிகரெட், மது முதலியவற்றைவிட சீனி அதிக ஆபத்தானது என்று சொல்லலாம். என்ன மது, புகையிலை மாதிரி இல்லாம கண்ணுக்கே  தெரியாம கொள்ளும் சீனி. 
புற்றுநோய், எலும்பு முறிவு நோய், மூட்டு வியாதிகள், உடல் பருமன், இதய நோய்கள், இரத்த அழுத்தம், சருமநோய்கள், விரைவில் முதிர்ச்சி, முதுமை, பித்தக்கல், ஈரல்நோய், சிறுநீரகக்கோளாறு, சொத்தைப்பல், பெண்ணுறுப்பு தொற்றுநோய், அளவுக்கு மீறிய சுறுசுறுப்பு, வன்செயல் மற்றும் பரவலாக இருக்கும் நீரழிவு நோய், இப்படி சீனி உடம்பிலுள்ள ஒவ்வொரு உறுப்பையும் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது. டின் பானங்கள், செயற்கை சத்துணவுகளை 
சாப்பிட்டா  நாம சீக்கிரம் டின் /மண்ணுக்குள்ள போக வேன்டியதுதா. 

உங்கள் குழந்தைக்கு குளிர்பானம், ஐஸ்கிரீம், சாக்லேட் மற்றும் அளவுக்கு அதிகமான சீனி உள்ள உணவுகளைக் சிறு வயது முதலே கொடுப்பதன் மூலம் உங்கள் குழந்தையை நீங்களே நோயாளியாக உருவாக்குகிறீர்கள் என்று அர்த்தம்.  இனிப்பான பொருளை உண்ணும்போது வாயில் உள்ள பாக்டீரியாக்கள் அதனுடன் சேர்ந்து அமிலத்தை உருவாக்குகிறது. இந்த அமிலம் பிறகு பற்களில் உள்ள எனாமலை அரித்து ஓட்டையாக்கி பல் சொத்தையை உண்டாக்குகிறது. தினமும் 24 தேக்கரண்டி சீனி நமது உணவில் சேர்ந்தால் இது 92 சதவிகித வெள்ளை இரத்த அணுக்கள் உருவாவதை தடுக்கிறது. இந்த வெள்ளை அணுக்கள் அபாயகரமான பாக்டீரியாக்களை எதிர்க்கும் தன்மை உடையவை.

சீனி உட்கொள்வோரின் உடலில் தேங்கி இருக்கும் அமில கழிவுகள் (சீனி தயாரிப்பில் பயன்படுத்தப்படும் விஷ  அமிலங்கள் சல்பர் டை ஆக்சைடு (விஷம்)- இங்கே காணலாம்), இந்த வேதிப்பொருட்கள்  ஒவ்வொன்றையும், அதன் இயல்புத்தன்மையையும், அது ஆரோக்கியத்தை எப்படியெல்லாம் கெடுக்கும் என்பதையும் ஒரு தனிபதிவே எழுதலாம். அதை சர்க்கரை ஆலைகள் பயன்படுத்தும் விதத்தை நோக்கினால், இது குழந்தை முதல் முதியவர் வரை பயன்படுத்துவது என்ற பிரக்ஞையே இல்லாமல் ஈவிரக்கமின்றி செய்கிறார்களே என்று மனம் பதறும். ஆனால் மெத்தப்படித்த மேதாவிகளும் அப்படி வரும் சீனியை ருசித்து பருகுவதுடன் தன்  குழந்தைகளுக்கும் கொடுப்பதுதான் மகா கொடுமை!. மேற்சொன்ன வேதிப்போருதகளையும், அமிலங்களையும் உடலின் இருந்து சுத்தப்படுத்த அதிகமான இன்சுலின் வெளியாக்கப்படுகிறது. அளவுக்கு அதிகமாக வெளியாகும் இன்சுலினுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியைத் தடுக்கும் ஹார்மோன்களான புரோஸ்டேகிளேன்டின் வுக்கும் அதிக தொடர்பு இருக்கிறது. இது புற்றுநோய் கழலையை உருவாக்குகிறது. 
சர்க்கரை சுத்த அசைவம் என்பது - மற்றொரு மறைக்கப்பட்ட உண்மை. சர்க்கரையை வெள்ளையாக்க, மாட்டெலும்பு பயன்படுத்தப்படுகிறது. Bone Char எனப்படும் எரிக்கப்பட்ட மாட்டெலும்பு பில்டராக பயன்படுகிறது. சர்க்கரையில் சேர்க்கவேண்டிய கால்சியதுக்கு-கார்பனுக்கு மாற்றாக மாட்டெலும்பு பொடி பல சர்க்கரை ஆலைகளில் சேர்க்கப்படுகிறது. ஆக , இனி சர்க்கரை கொண்டு செய்யப்படும் இனிப்பு பலகாரங்கள்,  உணவு எதுவும் சைவ உணவுப் பழக்கமுடையவர்கள் பயன்படுத்தக் கூடாது. கோயிலில் வெள்ளை சர்க்கரை கொண்டு செய்யப்பட்ட பொருட்கள் உள்ளேயே விடக்கூடாது. வெள்ளை சர்க்கரை உண்டவர்கள் கோயிலுக்கு செல்லவே கூடாது. நோயை கொடுக்கும்  சீனி கொண்டு பலகாரம் செய்து, கோவிலில் பிரசாதம் என்று கொடுத்து பாவத்தை சேர்த்துக்கொள்ள வேண்டாமே! நம்ம ஊர்  கோவில்களில் சர்க்கரை பொங்கல் - என்று கொடுக்கப்பட்டவை வெல்லம் போட்டு செய்தவையே. 
கற்பக விருட்சம் என்று சொல்லி மாநில மரம் நு சொல்றது பேருக்கு மட்டும் தான், நிஜத்தில் பனைமரங்களை நமது அரசே கொன்று குவிக்கிறது. இப்படியே பணியை அருங்காட்சியகத்தில் மட்டும் பார்க்கும் காலம் வெகுதூரம் இல்லை. கரும்பை விட எட்டு மடங்கு சர்க்கரையை கொடுக்கும் பனை மரத்தை எப்படி காப்பது என்று நமது அன்பர்களிடமிருந்து கற்போம். தாதுப் பொருட்கள் மிகுந்து இருக்கும் வெல்லம், பனை வெல்லம் & தேன் போன்றவற்றை நல்லவை என்று மூளைக்கு தெரிந்தாலும், சுவை கெட்டுப்போன மனிதனின் நாக்கு ஏற்க மறுக்கிறது. சுவையற்ற வெள்ளைச்சீனியே சுவை மிக்கது என்கிறது பாழாய்ப்போன மனித மணம் . சீனி உள்ள உணவுகளைக் சிறு வயது முதலே கொடுப்பதன் மூலம் உங்கள் குழந்தையை நீங்களே நோயாளியாக உருவாக்குவது மட்டுமல்லாமல் ஒரு வலுவற்ற எதிர்கால சந்ததியினர் & சுற்றுப்புற சூழல் உருவாக அடித்தளம் இடுகிறீர்கள் என்று உணருங்கள். 
நான் ஒருத்தர் நிறுத்திட்டா எல்லாம் சரியாகிடுமா? என்று தோன்றுகிறதா! வாங்குவதற்கு ஆள் இல்லையேல் சீனி விற்பவன் ஏது ?
நாட்டையும் வீட்டையும் வளமாகவும், நோயற்ற சமூகத்தையும் சுற்றுப்புறத்தையும் உருவாக்க உறுதிகொள்வதோடு நின்றிடாமல் செயல்படுதுக்கள், முடிந்தால் நீங்கள் விரும்பும் சொந்தங்களுக்கும் எடுத்து சொல்லுங்கள். 
அடுத்த தலைமுறையை இயற்கையிலேயே நோயுடைய தலைமுறையாக்கும் சீனியை உங்கள் வீடுளிருந்து அகற்றுங்கள்.

சீனி விலை கம்மி, பனை வெல்லம், வெல்லம்  & தேன் விலை அதிகம் நு சொல்லிட்டு, மருத்துவமனைகளில் புரியாத நோய்களுக்கு தெரியாத ஆள் கிட்ட வைத்தியம் பார்க்க, வரிசையில் உட்கார்ந்து காசை செலவழிக்க வேண்டி வரும். வாழ்க வளமுடன். 

தித்திக்கும் தீபஒளி திருநாள் நல்  வாழ்த்துக்கள். 

சீனி பற்றிய அப்பட்டமான உண்மைகளை John Yudkin (8 August 1910 - 12 July 1995) was a British physiologist and nutritionist தன்னுனைய Pure White and Deadly புத்தகத்தில்... free pdf


நன்றி பசுமை விகடன் 20151110


Thursday, July 23, 2015

மாதவிடாயும் சுற்றுப்புற சூழல் சுகாதாரமும்: நம் அறிவும் அறியப்பட வேண்டியனவும் Menstrual and Environmental Hygiene wisdom: knowns and unknowns

Menstrual and Environmental Hygiene Wisdom: knowns and unknowns /
மாதவிடாயும் சுற்றுப்புற சூழல் சுகாதாரமும்: நம் அறிவும் அறியப்பட வேண்டியனவும். 

Image result for menstrual wisdom
Godess Kamakya of Assam

Image result for menstrual wisdom
28 நாள் சுழற்சி 

Image result for menstrual wisdom
நிலவும் மாதவிடாயும் 
"சுகாதார துணியும்" (சானிடரி நாப்கின்ஸ் அண்ட் டியாபெர்ஸ்) அதன் சுகாதாரமும்! என்ன பாக்குறீங்க வாங்க பேசலாம். 
வாங்குவதற்கு மட்டுமல்ல அதனை எப்படி அப்புரபடுதுகிறோம் என்பது பற்றி யாரும் பேச கூட நினைப்பதில்லை. நாம & நம்ம குழந்தைக நல்லா இருக்கனும் நு வாங்குறோம், பயன்படுத்துறோம், அதுல என்ன பேச்சு வேண்டி கிடக்கு நு நீங்க கேக்குறது புரியுது. இதோ ஒரு குட்டி விளக்கம். 

பிறந்த குழைந்தைக்கு ஒரு நாளைக்கு கொறைஞ்ச பட்சம் 3-5 சுகாதார துணி ஒரு நாளைக்கு பயன்படுத்துறோம் நு வெச்சுக்குவோம். ஒரு குழந்தைக்கு மட்டும் அதனோட முதல் இரு ஆண்டுல 1920-3600 சுகாதார துணி தேவை. 
இது எப்டி நமக்கு கிடைக்குது? குறைஞ்சது 25-45 மரங்கள் வெட்டப்பட்டு, 2000 லிட்டர் எண்ணெய் (Diesel) மூலமா தயாரிக்க படுது. மரங்கள் வெட்ட, அறுக்க, போக்குவரத்து எரிவாயு செலவு தனி. 
பாருங்க, நம்மளோட "(சௌகர்ய) தேவை" க்காக சுற்றுப்புறதுல எவ்ளோ மாற்றம் நடக்குதுன்னு. இது வெறும் ஒரு குழந்தைக்கான கணக்கு  மட்டுமே! பெண்கள் பயன்படுத்துற "சுகாதார துணி" எண்ணிக்கை பத்தி சொல்லி தெரியனும் நு அவசியம் இல்லை. ஆண்டொன்றுக்கு 10 மில்லியன் டன் குப்பையில் கொட்டபடுகிறது!!
ஹ ஹ, அத எப்டி குப்பைல போடுறோம் ங்குறது வேற விஷயம். 

சரி இப்படியெல்லாம் சூழலை அழிச்சு, நமக்கு நன்மை ஏற்படுதானு  பார்த்தா அதுவும் இல்லை. "chlorine  bleach", Sodium Polyacrylate (நீர் உறிஞ்சும் வேதிப்பொருள்), Dioxin , Pthalates (குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தானது), Tributyl Tin (கேன்சர்  உருவாக்கும் தன்மை உடையது). 
இப்படி பல வேதிபொருட்கள் கொண்டு தான் ஒரு பிளாஸ்டிக் துணிய "சுகாதார துணி" நு சொல்லி வித்துக்கிட்டு இருக்கான். படிச்சா முட்டாள் ஆகிய நாம எல்லோரும் அத வாங்கி பயன்படுதிகிட்டு இருக்கோம். 
ஒரு பருத்தி துணி மட்க  சராசரிய 5 மாசம், ஆனா இந்த செயற்கை பிளாஸ்டிக் துணி மட்க சராசரியா  500 ஆண்டுகள் ஆகும்! அதுக்குள்ள  நாம டன் கணக்குல மலை மலையா குவிச்சுட்டு, பாவங்களை சம்பாதிச்சுக்கிட்டு  போயிடுறோம் (அதாங்க டண்டனக்கா ஆகிடுறோம்). 
இனி அதை சுகாதார துணி சொல்றது மடத்தனம்!
நமக்கும் பலன் இல்ல & நம்ம சுற்றுபுறத்துக்கும் நல்லது இல்ல. நம்ம சுற்றுப்புறம் --> காடுகளை அழிச்சு வேதிபொருட்கள் கொண்டு தயாரிக்கிறோம் -> அளவுக்கு அதிகமான முதலீடு கொண்டு (லாபம் அந்த பன்னாட்டு நிறுவனத்துக்கு) அதிலுள்ள வேதிபொருட்கள் மூலமா வர நோய்களை/ஒவ்வாமைகளை வாங்குறோம் -> குப்பைல தூக்கி எரியுரதால நிலம், நீர், காற்று இப்படி எல்லாத்தையும் மாசுபடுதிட்டு -> அந்த தண்ணிய குடிச்சு, காத்த சுவாசிச்சு சளி முதல் கான்செர் வரை வாங்கிட்டு ->மறுபடியும் அத சரி பண்றேன் நு சொல்லி சம்பாதிச்ச பணத்தை மருந்து மாத்திரைகள் நு செலவு பண்ணிக்கிட்டு  இருக்கோமே, நாம முட்டாள்கள் இன்றி வேறு ஏது !

வேற என்ன பண்றது! பழமை தான். இப்போ வர்ற 90% இயற்கை கண்டுபிடிப்புகள், பழங்காலத்து வழக்கங்கள் தான். மட்கும் "சுகாதார துணி", பருத்தி துணி இப்டி நிறைய வழிகள் இருக்கு. மாதவிடாய் நாட்களில் நம்ம ஊர்ல பெண்கள தனியா போய் இருக்க சொல்றதுலயும் அறிவியல் இருக்கு. அமெரிக்காவில் மாதவிடாய் பெண்கள் தனியா இருந்து, பாட்டிகள் அவங்க அனுபவத்த சொல்றது  பயனுள்ளதா இருக்கு, மன அமைதியும் புத்துணர்வும் தருவதால், "Red  Tent " என்று ஒரு அமைப்பு ஏற்படுத்தி பிரபலமாகிட்டு வருது. Red tent - things we dont talk about movie . 
அதே அமெரிக்கா தான் (UN, WHO) போன்ற அமைப்புகள் இந்தியா போன்ற நாட்ல சுகாதாரம் இல்ல, படிப்பறிவு இல்ல நு சொல்லி., அவங்க பணம் சம்பாதிக்க அவங்க நாடு நிறுவன பொருட்களை (அறிவில்லாத) நம்ம கிட்ட வந்து வித்துட்டு இருக்கான். நாமலும் விலை அதிகமா இருக்கு, நல்ல பொருள் அப்டி நு  பயன்படுத்துறோம்! வேடிக்கை என்னவென்றால் மேலை நாட்ல சுகாதாரம், சுற்றுப்புறம் தூய்மை கருதி, நாம பல காலங்களா பயன்படுத்திக்கொண்டு இருந்த வழக்கம் - பருத்தி துணிகளை பயன்படுத்தி அதையே மீண்டும் துவைத்து காயவைத்து பயன்படுத்த  ஆரம்பிச்சுட்டாங்க. 

போலியான கணக்கீடுகளை வெளியிட்டு, ஊடகங்களை வசப்படுத்தி போலியான தேவைகளை உருவாக்கி, எப்படி நம்ம அறிவை மங்கச்செய்து வியாபாரம் பண்றான் என்பதை Sinu  Joseph (a menstrual hygiene educator, counselor and founder of Mythri Speaks Trust) அவர்கள் ஆதாரத்தோடு விளக்குவதை படிச்சு பாருங்க. 

நம்ம ஊர்ல இருந்த பண்டைய பழக்க வழக்கங்கள் ல ஒளிந்திருக்கும் அறிவியல் உண்மைகளையும், அனுபவ வார்த்தைகளையும் புரிஞ்சி நடந்துக்குற அறிவு விழிப்புணர்வு தான் நமக்கு இப்போது தேவை! சுற்றுசூழலுக்கும் நாட்டிற்கும் கேடு விளைவிக்கும் வேதிப்பொருட்கள் கொண்டு செய்யும் பொருட்கள் அல்ல!
ஏன்  கோவிலுக்கு போக கூடாது, ஏன்  தனி அறைல இருக்கணும், மாதவிடாய் அசுத்தமா, சுத்தமா இப்டி எழும் பல கேள்விக்கு அழகான பதில்களை இங்கே - Unearthing menstrual wisdom காணலாம். இந்த அருமையான விளக்கங்கள் நம்மை மாயை ஊடக உலகில் இருந்து விடுபட உதவியா இருக்கும். 

கண்களை மறைக்கும் விளம்பர & ஆடம்பர உலகத்தில் இருந்து விடுபட்டு சுகதரமாக, சுத்தமான சுற்றுப்புற சூழலுடன் வாழுங்கள், குறைந்தபட்சம் முயலுங்களேன். 

இதில் உள்ள இணைப்பை மறக்காமல் படிக்கவும்​_Hidden dangers of sanitary napkins

சில பயனுள்ள இணையதளங்கள்