Thursday, July 23, 2015

மாதவிடாயும் சுற்றுப்புற சூழல் சுகாதாரமும்: நம் அறிவும் அறியப்பட வேண்டியனவும் Menstrual and Environmental Hygiene wisdom: knowns and unknowns

Menstrual and Environmental Hygiene Wisdom: knowns and unknowns /
மாதவிடாயும் சுற்றுப்புற சூழல் சுகாதாரமும்: நம் அறிவும் அறியப்பட வேண்டியனவும். 

Image result for menstrual wisdom
Godess Kamakya of Assam

Image result for menstrual wisdom
28 நாள் சுழற்சி 

Image result for menstrual wisdom
நிலவும் மாதவிடாயும் 
"சுகாதார துணியும்" (சானிடரி நாப்கின்ஸ் அண்ட் டியாபெர்ஸ்) அதன் சுகாதாரமும்! என்ன பாக்குறீங்க வாங்க பேசலாம். 
வாங்குவதற்கு மட்டுமல்ல அதனை எப்படி அப்புரபடுதுகிறோம் என்பது பற்றி யாரும் பேச கூட நினைப்பதில்லை. நாம & நம்ம குழந்தைக நல்லா இருக்கனும் நு வாங்குறோம், பயன்படுத்துறோம், அதுல என்ன பேச்சு வேண்டி கிடக்கு நு நீங்க கேக்குறது புரியுது. இதோ ஒரு குட்டி விளக்கம். 

பிறந்த குழைந்தைக்கு ஒரு நாளைக்கு கொறைஞ்ச பட்சம் 3-5 சுகாதார துணி ஒரு நாளைக்கு பயன்படுத்துறோம் நு வெச்சுக்குவோம். ஒரு குழந்தைக்கு மட்டும் அதனோட முதல் இரு ஆண்டுல 1920-3600 சுகாதார துணி தேவை. 
இது எப்டி நமக்கு கிடைக்குது? குறைஞ்சது 25-45 மரங்கள் வெட்டப்பட்டு, 2000 லிட்டர் எண்ணெய் (Diesel) மூலமா தயாரிக்க படுது. மரங்கள் வெட்ட, அறுக்க, போக்குவரத்து எரிவாயு செலவு தனி. 
பாருங்க, நம்மளோட "(சௌகர்ய) தேவை" க்காக சுற்றுப்புறதுல எவ்ளோ மாற்றம் நடக்குதுன்னு. இது வெறும் ஒரு குழந்தைக்கான கணக்கு  மட்டுமே! பெண்கள் பயன்படுத்துற "சுகாதார துணி" எண்ணிக்கை பத்தி சொல்லி தெரியனும் நு அவசியம் இல்லை. ஆண்டொன்றுக்கு 10 மில்லியன் டன் குப்பையில் கொட்டபடுகிறது!!
ஹ ஹ, அத எப்டி குப்பைல போடுறோம் ங்குறது வேற விஷயம். 

சரி இப்படியெல்லாம் சூழலை அழிச்சு, நமக்கு நன்மை ஏற்படுதானு  பார்த்தா அதுவும் இல்லை. "chlorine  bleach", Sodium Polyacrylate (நீர் உறிஞ்சும் வேதிப்பொருள்), Dioxin , Pthalates (குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தானது), Tributyl Tin (கேன்சர்  உருவாக்கும் தன்மை உடையது). 
இப்படி பல வேதிபொருட்கள் கொண்டு தான் ஒரு பிளாஸ்டிக் துணிய "சுகாதார துணி" நு சொல்லி வித்துக்கிட்டு இருக்கான். படிச்சா முட்டாள் ஆகிய நாம எல்லோரும் அத வாங்கி பயன்படுதிகிட்டு இருக்கோம். 
ஒரு பருத்தி துணி மட்க  சராசரிய 5 மாசம், ஆனா இந்த செயற்கை பிளாஸ்டிக் துணி மட்க சராசரியா  500 ஆண்டுகள் ஆகும்! அதுக்குள்ள  நாம டன் கணக்குல மலை மலையா குவிச்சுட்டு, பாவங்களை சம்பாதிச்சுக்கிட்டு  போயிடுறோம் (அதாங்க டண்டனக்கா ஆகிடுறோம்). 
இனி அதை சுகாதார துணி சொல்றது மடத்தனம்!
நமக்கும் பலன் இல்ல & நம்ம சுற்றுபுறத்துக்கும் நல்லது இல்ல. நம்ம சுற்றுப்புறம் --> காடுகளை அழிச்சு வேதிபொருட்கள் கொண்டு தயாரிக்கிறோம் -> அளவுக்கு அதிகமான முதலீடு கொண்டு (லாபம் அந்த பன்னாட்டு நிறுவனத்துக்கு) அதிலுள்ள வேதிபொருட்கள் மூலமா வர நோய்களை/ஒவ்வாமைகளை வாங்குறோம் -> குப்பைல தூக்கி எரியுரதால நிலம், நீர், காற்று இப்படி எல்லாத்தையும் மாசுபடுதிட்டு -> அந்த தண்ணிய குடிச்சு, காத்த சுவாசிச்சு சளி முதல் கான்செர் வரை வாங்கிட்டு ->மறுபடியும் அத சரி பண்றேன் நு சொல்லி சம்பாதிச்ச பணத்தை மருந்து மாத்திரைகள் நு செலவு பண்ணிக்கிட்டு  இருக்கோமே, நாம முட்டாள்கள் இன்றி வேறு ஏது !

வேற என்ன பண்றது! பழமை தான். இப்போ வர்ற 90% இயற்கை கண்டுபிடிப்புகள், பழங்காலத்து வழக்கங்கள் தான். மட்கும் "சுகாதார துணி", பருத்தி துணி இப்டி நிறைய வழிகள் இருக்கு. மாதவிடாய் நாட்களில் நம்ம ஊர்ல பெண்கள தனியா போய் இருக்க சொல்றதுலயும் அறிவியல் இருக்கு. அமெரிக்காவில் மாதவிடாய் பெண்கள் தனியா இருந்து, பாட்டிகள் அவங்க அனுபவத்த சொல்றது  பயனுள்ளதா இருக்கு, மன அமைதியும் புத்துணர்வும் தருவதால், "Red  Tent " என்று ஒரு அமைப்பு ஏற்படுத்தி பிரபலமாகிட்டு வருது. Red tent - things we dont talk about movie . 
அதே அமெரிக்கா தான் (UN, WHO) போன்ற அமைப்புகள் இந்தியா போன்ற நாட்ல சுகாதாரம் இல்ல, படிப்பறிவு இல்ல நு சொல்லி., அவங்க பணம் சம்பாதிக்க அவங்க நாடு நிறுவன பொருட்களை (அறிவில்லாத) நம்ம கிட்ட வந்து வித்துட்டு இருக்கான். நாமலும் விலை அதிகமா இருக்கு, நல்ல பொருள் அப்டி நு  பயன்படுத்துறோம்! வேடிக்கை என்னவென்றால் மேலை நாட்ல சுகாதாரம், சுற்றுப்புறம் தூய்மை கருதி, நாம பல காலங்களா பயன்படுத்திக்கொண்டு இருந்த வழக்கம் - பருத்தி துணிகளை பயன்படுத்தி அதையே மீண்டும் துவைத்து காயவைத்து பயன்படுத்த  ஆரம்பிச்சுட்டாங்க. 

போலியான கணக்கீடுகளை வெளியிட்டு, ஊடகங்களை வசப்படுத்தி போலியான தேவைகளை உருவாக்கி, எப்படி நம்ம அறிவை மங்கச்செய்து வியாபாரம் பண்றான் என்பதை Sinu  Joseph (a menstrual hygiene educator, counselor and founder of Mythri Speaks Trust) அவர்கள் ஆதாரத்தோடு விளக்குவதை படிச்சு பாருங்க. 

நம்ம ஊர்ல இருந்த பண்டைய பழக்க வழக்கங்கள் ல ஒளிந்திருக்கும் அறிவியல் உண்மைகளையும், அனுபவ வார்த்தைகளையும் புரிஞ்சி நடந்துக்குற அறிவு விழிப்புணர்வு தான் நமக்கு இப்போது தேவை! சுற்றுசூழலுக்கும் நாட்டிற்கும் கேடு விளைவிக்கும் வேதிப்பொருட்கள் கொண்டு செய்யும் பொருட்கள் அல்ல!
ஏன்  கோவிலுக்கு போக கூடாது, ஏன்  தனி அறைல இருக்கணும், மாதவிடாய் அசுத்தமா, சுத்தமா இப்டி எழும் பல கேள்விக்கு அழகான பதில்களை இங்கே - Unearthing menstrual wisdom காணலாம். இந்த அருமையான விளக்கங்கள் நம்மை மாயை ஊடக உலகில் இருந்து விடுபட உதவியா இருக்கும். 

கண்களை மறைக்கும் விளம்பர & ஆடம்பர உலகத்தில் இருந்து விடுபட்டு சுகதரமாக, சுத்தமான சுற்றுப்புற சூழலுடன் வாழுங்கள், குறைந்தபட்சம் முயலுங்களேன். 

இதில் உள்ள இணைப்பை மறக்காமல் படிக்கவும்​_Hidden dangers of sanitary napkins

சில பயனுள்ள இணையதளங்கள்